ADDED : நவ 06, 2026 07:37 PM

படம் 3 காலம்
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கநாதன் 14ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர், சொரத்துார் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கநாதன் உருவபடத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி, இணை செயலர் வேங்கடவேனு, துணை தலைவர் குணசேகரன், துணை செயலாளர் ஜெய்சங்கர், நகர அவை தலைவர் தங்கராசு, மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், பச்சமுத்து, ராஜேந்திரன், , செல்வம், மாவட்ட மகளிரணி தலைவர் தமிழ்ச்செல்வி, இணை செயலாளர் சந்திரா, கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் நகர பொருளாளர் செல்வம், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகரன், பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
