/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு
/
குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு
ADDED : ஜன 22, 2025 09:40 AM

நெய்வேலி. : நெய்வேலி சிநேகா வாய்ப்பு பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் சேவையை என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி துவக்கி வைத்தார்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ல் சிநேகா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அறிவுசார் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கல்வி மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. சிநேகா பள்ளி சிறப்பு மாணவ, மாணவிகளுக்கு நவீன கணினி ஆய்வகம் அமைத்து கொடுத்தது மற்றும் இலவச மதிய உணவு வழங்கி வருவது போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு துறை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சிறப்பு பஸ் சேவையை என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சிநேகா பள்ளி தலைவர் ராதிகா பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், என்.எல்.சி., சட்டத்துறை, சி.எஸ்.ஆர்., மற்றும் என்.எல்.சி., மருத்துவமனை செயல் இயக்குநர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டனர். நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் இலவச பஸ் சேவை வழங்க உள்ளது தெரிவிக்கப்பட்டது.