ADDED : ஜூலை 10, 2025 12:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி ஆரஞ்சு விஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் சந்திரமெளலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டாக்டர் லாவன்யா தலைமையில் மருத்துவ குழுவினர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்ணில் நீர், புரை மாறுகண், ரத்த சர்க்கரையளவு, ரத்தக்கொதிப்பு, கண் விழித்திரை உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. . முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.