ADDED : ஆக 16, 2026 07:42 PM
விளம்பரதாரர் செய்தி:
விருத்தாசலம், ஆக. 17–
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் அரிமா சங்கம் ஹோஸ்ட், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, கோயம்புத்துார் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், 104வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு, அரிமா சங்க தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், சுரேஷ்சந்த் முன்னிலை வகித்தனர்.ஆர்.டி.ஓ., வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி, முன்னாள் ஆளுநர் கல்யாண்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், மாவட்ட தலைவர் அபிராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர்.செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.
இதில், மாவட்ட தலைவர்கள் விஜயமூர்த்தி, சண்முகம், கரியப்பா, லட்சுமி நாராயணன், ஜெயவேல், சிவப்பிரகாசம் மற்றும் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் விஷ்ணுபிரசாத் நன்றி கூறினார்.
