/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி உரிமை தினம் கடைபிடிப்பு வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கல்
/
நெய்வேலி உரிமை தினம் கடைபிடிப்பு வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கல்
நெய்வேலி உரிமை தினம் கடைபிடிப்பு வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கல்
நெய்வேலி உரிமை தினம் கடைபிடிப்பு வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கல்
ADDED : ஆக 29, 2025 03:10 AM

நெய்வேலி: நெய்வேலி நகர எல்லலைக்குள் என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் அனுமதி பெறாத வாகனங்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை.
கடலுார் மாவட்டம் நெய்வேலி நகரம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி நகர எல்லைக்குள் மாநில அரசு, மற்றும் தனியார் வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதிகிடையாது.
நெய்வேலி நகரத்திற்குள் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பயணிப்பதற்கு என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் என்.எல்.சி., பாதுகாப்பு படையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டமாகும்.
ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் மாநில மற்றும் தனியார் வாகனங்கள் என்.எல்.சி., பாதுகாப்பு படையினரின் அனுமதி பெற்ற பிறகு மட்டுமே நெய்வேலி நகர எல்லைக்குள் அனுமதிக்கப்பட் டு வருகின்றனர்.
அதனடிப்படையில் 2025 ம் ஆண்டுக்கான சாலை உரிமை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நெய்வேலி ஆர்ச்சேட் நுழைவாயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு என்.எல்.சி., நகர நிர்வாகத்துறை பொது மேலாளர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.
என்.எல்.சி., பாதுகாப்பு படையின் துணை பொது மேலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தமிழக அரசின் போக்குவரத்து பேருந்துக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கி பேருந்துக்கு அனுமதிவழங்கினார்.
இதனை தொடர்ந்து நெய்வேலி நகரின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் பிரவேசித்த அனைத்து வாகனங்களுக்கும் என்.எல்.சி.., பாதுகாப்பு படையினர் இலவச அனுமதி சீட்டு வழங்கி வாகனங் களைஅனுமதித்தினர்.
நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை சாலை உரிமைதினம் கடைபிடிக்கப்பட்டது.