ADDED : ஆக 27, 2025 11:15 PM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், மஹா கணபதி பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று 28 ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்கு பூஜையும், நாளை 29ம் ம் தேதி சிறப்பு பூஜையும், மகளிர் சிறப்பு பட்டி மன்றமும், 30 ம் தேதி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக வரும் 31 ம் தேதி 1,008 கொழுக்கட்டையுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வடக்கு வெள்ளுர் காசி விஸ்வநாதர் கோவில் திருக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மற்றும் வெற்றி விநாயகர் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்