/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கங்கை அறக்கட்டளை 12 ம் ஆண்டு துவக்க விழா
/
கங்கை அறக்கட்டளை 12 ம் ஆண்டு துவக்க விழா
ADDED : மே 17, 2025 12:31 AM

கடலுார்: கடலுார் அடுத்த செல்லங்குப்பத்தில் கங்கை அறக்கட்டளை 12ம் ஆண்டு துவக்க விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கங்கை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அய்யம்மாள் தலைமை தாங்கினார். நிறுவனர் வீரசேகர் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு ஒரு மூட்டை அரிசி, 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாநகர கவுன்சிலர் சரத், சங்கர்தாஸ் லட்சுமி, தொழிலதிபர் பழனி, வழக்கறிஞர் அசோக்குமார், கங்கை அறக்கட்டளை நிர்வாகிகள், களப்பணியாளர்கள் ரமேஷ், வெங்கட், விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டுவிழாவையொட்டி ஏழை மக்களுக்கு சோலார் லைட் அமைப்பது, இலவச வீடு கட்டி தருவது, தையல் பயிற்சி, அழகுநிலையம் பயிற்சி அளிப்பது என, அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.