ADDED : செப் 05, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே நாய் கடித்து சிறுமி காயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 30; இவரது மகள் தமிழினி, 6; இவர், அப்பகுதியில் உள்ள உதவி பெறும் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 3:00 மணிக்கு தமிழினி வீட்டில் இருந்து வெளியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாய் ஒன்று, திடீரென தமிழினியை பார்த்து குரைத்தது. இதனால் பயந்த ஓட முயன்ற சிறுமியை நாய் துரத்தி சென்று கடித்தது. இதில், சிறுமிக்கு முகம், கை, காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அடித்து சிறுமியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.