ADDED : டிச 29, 2024 11:11 PM
விழிப்புணர்வு கோலங்கள்
ரங்கோலி மற்றும் டிசைன் கோலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, தண்ணீர் பாதுகாப்பு, சிறுதானியங்கள் பயன்பாடுகள், பறவைகள் பாதுகாப்பு, காய்கறிகள் பயன்பாடு, பருப்பு வகைகள், போதை பொருட்களை ஒழிப்பது, மரங்களை வெட்டக்கூடாது, முதுமைக்கு தோல் கொடு, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு தொடர்பான கோலங்களை அதிகம் காண முடிந்தது.
இதில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் உரிய நீதி வழங்க வேண்டும் மற்றும் போக்சோ சட்டத்திற்கான விழிப்புணர்வு கோலங்கள் அதிகளவில் போடப்பட்டது.
தேச தலைவர்கள், சுவாமிகள்
ரங்கோலி, டிசைன் கோலங்களில் பாரதியார், வேலுநாச்சியார் ஆகிய தேச தலைவர்கள் மற்றும் ஆண்டாள், விநாயகர், கிருஷ்ணர், சிவன், முருகன், உள்ளிட்ட சுவாமிகள், பொங்கள் பண்டிகை தொடர்பான கோலங்கள் அதிகளவில் பெண்கள் போட்டனர்.
மொபைல் போன் மோகம்
கோலப்போட்டியில் தற்போது இணையதளம், மொபைல் போன்களை ஆக்கிரமித்துள்ள கூகுள் ஆப்களில் (வாட்ஸ்ஆப், ஜி மெயில், யு டியூப், முகநுால் சிம்பல்கள்) தாய் மற்றும் அவரது கருவறையில் உள்ள குழந்தை ஆகியோர் பார்ப்பது போன்ற கோலத்தை வரைந்து, வியப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதேபோல், தை பொங்கல், விவசாயிகள் பாதுகாப்பு, ராணு வீரர்கள் பாதுகாப்பு குறித்து வண்ண கோலமிட்டு பலர் அசத்தியிருந்தனர்.
அறிவியல் உச்சம்
கடந்த காலங்களில் நார்மலாக பெண்கள் கர்ப்பமாகினர். தற்போது டெஸ்ட் டியூப் பேபி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருங்காலங்களில் லேப்களில் இயந்திரங்கள் மூலம் குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை தமிழகத்தின் அடையாளம், அறிவியல் உச்சம் என்ற தலைப்பில் பெண் ஒருவர் தத்ரூபமாக வரைந்து வண்ண கோலமிட்டார்.

