/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு
/
அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு
ADDED : நவ 16, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே, அரசு துணை சுகாதார நிலைய திறப்பு விழா நடந்தது.
ஆயங்குடியில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை, லால்பேட்டை மற்றும் கொல்லி மலையில் அரசு சுகாதாரத் துறை சார்பில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் உள்ளிட்டவற்றை வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

