/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புனித அன்னாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
புனித அன்னாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா
புனித அன்னாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா
புனித அன்னாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 22, 2025 09:09 PM

கடலுார் : கடலுார் புதுப்பாளையம், புனித அன்னாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் செராபின் மேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி வரவேற்றார். கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் பள்ளி வளர்ச்சிக்காக ஜி.ஆர்.கே., அறக்கட்டளை சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஜான் பிரிட்டோ மேரி, விஜே., நிவேதிதா கவுரவ விருந்தினர்களாகவும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துக்குமார், சங்க உறுப்பினர் ஆரோக்கிய டேவிட் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்றனர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.