/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழுதலம்பட்டில் கிராம சபைக் கூட்டம்
/
வழுதலம்பட்டில் கிராம சபைக் கூட்டம்
ADDED : அக் 12, 2025 04:37 AM

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து வழுதலம்பட்டு ஊராட்சியில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'ஊராட்சி திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நி தி செலவினம், சுகாதாரம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த அறிக்கைகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த விவாதங்களை கிராம பொதுமக்கள் புரிந்து தீர்மானங்களை நிறைவேற்ற கருத்துக்களை தெரிவித்து, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
பயிற்சி கலெக்டர் மாலதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும், ஆர்.டிஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.