நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்.சார்பில் நேற்று முதல், வரும் 2ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடலுார் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தில் வாடிக்கையாளர் குறைதீர்வு முகாம் இன்று (28ம் தேதி) காலை 10:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. முகாமில், வாடிக்கையாளர்கள் குறைகளை நேரிடையாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

