/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜி.ஆர்.கே., குழுமம் அன்னதானம் வழங்கல்
/
ஜி.ஆர்.கே., குழுமம் அன்னதானம் வழங்கல்
ADDED : ஜூலை 14, 2025 03:36 AM

கடலுார் : கடலுார் ஜி.ஆர்.கே.,குழுமம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கடலுார் ஜி.ஆர்.கே.,குழுமம் சார்பில் கடலுார், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 1,000த்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று காலை கடலுார் கிருஷ்ணாலயா ஏ.ஜி.எஸ்.,தியேட்டரில் இலவச சிறப்பு காட்சியாக 'ஸ்பைடர் மேன்'சினிமா திரையிடப்பட்டது.
தொடர்ந்து ஜி.ஆர்.கே.,எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், மதிய உணவு வழங்கினார். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே., எஸ்டேட், கிருஷ்ணாலயா ஏ.ஜி.எஸ்.,தியேட்டர் மற்றும் சக்ராலயா, சங்காலயா மோட்டார்ஸ் நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர்.