/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 27, 2025 11:10 PM
விருத்தாசலம்; மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையில், விருத்தாசலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் பகுதியில் கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். மேலும், வெயில் தாக்கத்தால், ஏரி, குளங்கள் வறண்டதோடு, கிணறு போர்வெல்களிலும் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.
இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, விருத்தாசலம் பகுதியில் உள்ள வயலுார், ரூபநாரயணநல்லுார், மாத்துார் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும், கிணறு, போர்வெல்களிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கோடையில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என கவலையடைந்த விவசாயிகள், கோடையில் பெய்த திடீர் கனமழையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.