ADDED : ஜூலை 10, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நடந்த தோப்பு உற்சவத்தில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு உற்சவம் நடப்பது வழக்கும். அதன்படி, ஆனி மாத தோப்பு உற்சவத்தையொட்டி தேவநாத சுவாமி நேற்று நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
முன்னதாக, கோவில் நடை மூடப்பட்டது. பின், திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை மீண்டும் தேவநாத சுவாமி திருவந்திபுரத்திற்கு எழுந்தருளினார். பின், நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.