/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜை
/
தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜை
ADDED : ஆக 12, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜை விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜையொட்டி சுவாமிக்கு சிறப்பு ஹோமங்கள், புனித நீர் கொண்டு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, பரிவார தெய்வங்கள் விநாயகர், பாலமுருகனுக்கு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் தத்துவராய சுவாமி அருள்பாலித்தார்.
கோவில் மடாதிபதி நாராயண தேசிகர் தலைமையிலும், கோவில் நிர்வாகி ராமநாதன் முன்னிலையிலும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.