நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சோழத்தரம் போலீசார் நேற்று முன்தினம் வடக்குப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள அதே பகுதியைச் சேர்ந்த அமர்நாத்,30; என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து அமர்நாத்தை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.