/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்., அலுவலக பணி
/
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்., அலுவலக பணி
ADDED : மார் 12, 2024 11:34 PM

நல்லுார் ஒன்றிம், பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சியில், சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், மேல்இருளம்பட்டு, கீழ்இருளம்பட்டு, அரியராவி ஆகிய கிராமங்கள் உள்ளது. ஊராட்சிக்கு இதுவரை அலுவலகம் இல்லை. இதனால் பொது இடங்கள், பள்ளிக்கூடம், சேவை மையம் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டம் மறறும் சிறப்பு கிராம கூட்டங்கள் நடந்தது.
ஊராட்சிக்குட்பட்ட பெரியகொசப்பள்ளத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் ஊராட்சி தொடர்பான கூட்டங்கள் நடந்தன. இதனால், மற்ற கிராமங்களில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியாமல் கிராம மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
சின்னகொசப்பள்ளத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டக்கோரி, கிராம மக்கள், வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்தாண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அலுவலகம் கட்டும் பணி துவங்கி, சுவர்கள் எழுப்பி, கான்கிரீட் போடும் அளவில் உள்ளன. ஆனால் மற்ற பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

