/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை
/
வடலுார், குறிஞ்சிப்பாடியில் கனமழை
ADDED : செப் 18, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்; வடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழை பெய்தது.
வடலுார், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
இதனால் பள்ளி, கல்லுாரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். நெல், கம்பு ஆகிய விவசாய விளை பொருட்களை அறுவடை செய்த விவசாயிகள் மழையால் கவலையடைந்தனர்.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.