/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுநீரக பிரச்னைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு: டாக்டர் கணபதி விளக்கம்
/
சிறுநீரக பிரச்னைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு: டாக்டர் கணபதி விளக்கம்
சிறுநீரக பிரச்னைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு: டாக்டர் கணபதி விளக்கம்
சிறுநீரக பிரச்னைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு: டாக்டர் கணபதி விளக்கம்
ADDED : ஜூலை 25, 2025 11:05 PM

சி றுநீரக பாதையில் ஏற்படும் நோயை ஹோமியோபதி சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும் என, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வி.ஜி.கே., நினைவு மருத்துவமனை ஹோமியோபதி டாக்டர் கணபதி கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
புரோஸ்டேட் என்பது ஒரு சிறிய சுரப்பி ஆகும். புரோஸ்டேட் விரிவாக்கம் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் நோயாகும்.
புரோஸ்டேட்டில் உள்ள திசுக்களும், அதன் சுரப்பியும் விரிவடைந்து சிறுநீர் குழாயின் பாதையை சுருக்குவதால் ஏற்படும் சிறுநீர் தொல்லையை 'புரோஸ்டேட்' விரிவாக்கம் என்கிறோம்.
இந்நோய் புற்றுநோய் ஏற்படக் கூடிய வீக்கம், புற்றுநோய் இல்லாமல் ஏற்படக் கூடிய வீக்கம் என இருவகையாக பிரிக்கப்படும். இதற்கு ஹோமியோபதியில் சிறந்த மருத்துவம் உள்ளது.
சிறுநீர் கசிவு அல்லது சொட்டுதல், சிறுநீர் கழித்தலை தொடங்குவதில் தயக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்க அடிக்கடி இரவில் எழுந்திருப்பது, சிறுநீர் பை முழுதும் காலியாகாதது போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
இதில், ஏதாவது 3 அறிகுறிகள் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட்டால் டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது. இந்நோயால் பாதித்தவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். மதுபானம், காபி, போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
வைட்டமின் பி-6, வைட்டமின்- ஈ, தாதுப் பொருட்கள் உள்ள கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், மீன்கள் அதிகளவில் சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே ேஹாமியோபதி மருந்து உட்கொண்டால் இந்நோய் முற்றிலும் குணமாகும்.
ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படும். நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், ஆஸ்துமா, வாதம், ஆர்த்ரிடிஸ் ஆகியவைகளுக்கு சிறந்த முறையில் ேஹாமியோபதி அக்குபஞ்சர், ஆயுதர்வேதம், இயற்கை வைத்தியம் முறையில் தீர்வு காணப்படும்.
திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமையும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.