/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
/
வடலுாரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
ADDED : அக் 09, 2025 11:39 PM
வடலூர்: வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
வடலூர் அடுத்த, பார்வதிபுரம் நாகப்பசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன், 40. இவரது வீட்டின் கீழ் தளத்தில் இவரது பெற்றோரும், மேல் தளத்தில் சங்கரன், அவரது மனைவி கிருத்திகா வசித்து வருகின்றனர்.
கடந்த, 5ம் தேதி இரவு, வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் தூங்க சென்றனர்.
அடுத்த நாள் வீட்டின் கதவை திறந்த போது, முகப்பில் பூஜை அறை பகுதியில் வைத்திருந்த பணம் சேமிக்கும் உண்டியல் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பூஜை அறையில் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு சுவாமி சிலை மீது அணிவித்திருந்த, 6 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிந்தது.
மேலும், வீட்டில் இருந்த, 50 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.,10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது.
சம்பவம் குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.