நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வேன் மோதி மூதாட்டி இறந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சக்கரகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மனைவி ஆண்டாள், 58. நேற்று காலை, ராஜேந்திரபட்டிணம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அவ்வழியே சென்ற பிக்அப் வேன் எதிர்பாறாத விதமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.