
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திராசு கிரமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை திருப்பூரில் கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். கறிக்கோழி பண்ணை சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இளையராஜா கண்டன உரை நிகழ்த்தினார். கரும்பு விவசாய அணி செயலாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த பண்ருட்டி போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரதம் நடைபெறுவதால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனையடுத்து மதியம், 12:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

