ADDED : நவ 09, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: மனைவியை ஆபாசமாக பேசியதை கண்டித்த கணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் இளையராஜா மனைவி ராஜேஸ்வரி,40; இவரை, இன்று (நவ.,9) அதே பகுதியை சேர்ந்த ஜோதி மகன் பாக்கிராஜ் ஆபாசமாக திட்டினார். அதனை தட்டிக் கேட்ட இளையராஜாவை, பாக்கியராஜ் தாக்கினார்.
புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து பாக்யராஜ், 39; கைது செய்தனர்.
