ADDED : ஜூலை 15, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து,35; கடந்த 10ம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மருதமுத்துவை தேடி வருகின்றனர்.