ADDED : டிச 10, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே புலவனுாரில் விநாயகர் கோவிலில் ஒன்றரை அடி உயர வெண்கல சிலையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த புலவனுார் மெயின்ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை நேற்று மாலை 6:30 மணிக்கு பூஜை முடிந்து, கோவிலை பராமரிக்கும் நந்தகோபால் பூட்டி சென்றார்.
நேற்று காலை 6:30 மணிக்கு பூஜைக்கு திறந்த போது கோவிலின் முன்பக்க பூட்டு திறக்கப்பட்டு, உள்ளிருந்த ஒன்றரை அடி உயர வெண்கல விநாயகர் சிலை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஸ்ரீதேவி கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, சிலை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

