/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு
/
மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : நவ 15, 2024 04:44 AM

சிறுபாக்கம்: மங்களூரில் புதிய ஒன்றிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து, ரூ.3.95 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
இதனை, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா, மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன், துணைச் சேர்மன் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் பாலக்கிருஷ்ணன் வரவேற்றார்.
பொறியாளர்கள் மணிவேல், செந்தில்வடிவு, கிறிஸ்டோபர், சிலம்பரசன், செந்தில், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், ஊராட்சி தலைவர் ராமு, தேவராஜ், கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், அலுவல வளாகத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தனர்.