sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூர் சரகத்தில் பறவை எண்ணிக்கை... அதிகரிப்பு; புதிய 400 இனங்கள் வந்துள்ளதாக தகவல்

/

கடலூர் சரகத்தில் பறவை எண்ணிக்கை... அதிகரிப்பு; புதிய 400 இனங்கள் வந்துள்ளதாக தகவல்

கடலூர் சரகத்தில் பறவை எண்ணிக்கை... அதிகரிப்பு; புதிய 400 இனங்கள் வந்துள்ளதாக தகவல்

கடலூர் சரகத்தில் பறவை எண்ணிக்கை... அதிகரிப்பு; புதிய 400 இனங்கள் வந்துள்ளதாக தகவல்


ADDED : ஜன 31, 2024 02:05 AM

Google News

ADDED : ஜன 31, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் வனச்சரகத்தில் நடந்த கணக்கெடுப்பில், இந்த ஆண்டு புதியதாக வந்துள்ள 400 இனங்கள் உட்பட, 1960 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

உணவு, பாதுகாப்பு மற்றும் புகலிடம் தேடி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பறவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அக்டோபர் முதல், மார்ச் மாதம் வரை வந்து செல்கிறது.

எந்தெந்த பகுதிகளில் எந்த வகை பறவைகள் வருகிறது என்பது குறித்தும், பறவைகளின் எண்ணிக்கை எந்தளவுக்கு உள்ளது என்பது குறித்தும் ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடக்கிறது. அதன்படி, இந்தாண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாவட்டம் வாரியாக கடந்த 27 மற்றும் 28ம் தேதி என 2 நாட்கள் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் காடுகளின் மொத்த பரப்பளவு 9,950 ஹெக்டர் ஆகும். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள், அலையாத்தி காடுகள் நிறைந்துள்ளது.

மாவட்டத்தில், கடலுார், கடலுார் புயல் தடுப்பு மையம், பிச்சாவரம், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி வன விரிவாக்கம் மையம், நெய்வேலி சமூக காடுகள் என மொத்தம் 7 வனச்சரகங்கள் உள்ளன.

கடலுார் வனச்சரகத்திற்குட்பட்ட கடலுார் கடற்கரை பகுதிகள், பெருமாள் ஏரி, கடலுார் கெடிலம் ஆறு, உப்பனாறு, புதுச்சேரி மாநிலமான பாகூர் ஏரிக்குட்பட்ட தமிழக பகுதி, மருதாடு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வன அதிகாரி குருசாமி தலைமையில், வனச்சரகர் பாரதிதாசன் முன்னிலையில் 6 குழுக்களைச் சேர்ந்த 25 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 38 வகையான பறவைகள் உட்பட, மொத்தம் 1960 வகையான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் முதற்கட்டமாக அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளுக்கு வந்து செல்லக் கூடிய பறவைகள் கண்கெடுப்பு பணி நடந்தது.

கடலுார் வனச்சரகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு பறவைகள் எண்ணிக்கை 400 அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அதிகமான நீர் நிலைகள் இருப்பது. இரண்டாம் கட்டமாக நிலப் பகுதிகளுக்கு வந்து செல்லக் கூடிய பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் மாதம் நடைபெற உள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us