ADDED : நவ 20, 2025 05:42 AM

புவனகிரி: முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நளை முன்னிட்டு, புவனகிரியில் காங்., சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஐயப்பன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.
சட்டசபை தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத் வரவேற்றார்.
மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், மாநில ஆலோசகர் செல்வகுமார், மகளிர் அணி அருள்ஜோதி, மூத்த நிர்வாகிகள் லட்சுமணன், நாகராஜன், மாசிலாமணி, பாலமுருகன், ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காமராஜர் சிலைக்கும், இந்திரா படத்திற்கு மாலை அணிவித்து, முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு, பனை விதைகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ரவி, ராமலிங்ம், அரசன்அம்பேத், ராமதாஸ், ஷாஜகான், சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

