தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்கலை கல்லுாரிகளுக்கிடையே இறகுபந்து போட்டி

 பல்கலை கல்லுாரிகளுக்கிடையே இறகுபந்து போட்டி

 பல்கலை கல்லுாரிகளுக்கிடையே இறகுபந்து போட்டி


ADDED : டிச 20, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் காட்டுமன்னார்கோவில், எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கு, இடையேயான இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

பல்கலை விளையாட்டுகளுக்கான கன்வீனர் சரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். உடற்கல்வி துறை இணை இயக்குனர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, 6 வது பெட்டாலியன் நிர்வாக அதிகாரி லெப்டினல் கர்னல் நாராயண் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.

இதில் பல்வேறு மாவட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். போட்டியில், அண்ணாமலை பல்கலை கேம்பஸ் அணி முதலிடம், கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி இரண்டாம் இடம், மயிலாடுதுறை டி.ஏ.சி., கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா கல்லுாரி அணி மூன்றாம் இடம் பிடித்தனர்.

அதேபோல் பெண்கள் பிரிவில், அண்ணாமலை பல்கலை கேம்பஸ் அணி முதலிடம், விழுப்புரம் வள்ளியம்மை கல்லுாரி இரண்டாம் இடம், பூம்புகார் கல்லுாரி மற்றும் திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரிமூன்றாம் இடம் பிடித்தனர்.

அண்ணாமலை பல்கலை பி.டி.சி., முதல்வர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்கினார் பெண்கள் கன்வீனர் பானுப்பிரியா நன்றி கூறினார். பேராசிரியர்கள் பாலமுருகன், பூபேஷ், மூர்த்தி, சேவி, மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

போட்டி ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us