/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த அறிமுக நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த அறிமுக நிகழ்ச்சி
மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த அறிமுக நிகழ்ச்சி
மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த அறிமுக நிகழ்ச்சி
ADDED : ஜூலை 10, 2025 12:28 PM

கடலுார்: தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு வார காலம் அரசு திட்டங்கள் அறிமுக பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு புதிய மாணவர்கள் 900 பேர் சேர்க்கை நடந்தது. உயர்கல்வித் துறை வழிக்காட்டுதல்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த 30ம் தேதி வகுப்புகள் துவங்கப்பட்டு 7ம் தேதி வரை ஒரு வார காலம் மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் அறிமுக பயிற்சி நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் துறை பேராசிரியர் ராஜா வரவேற்றார்.
முதலாமாண்டு புதிய மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ஜோதி செல்வி, நிர்மல் குமார், கிறிஸ்டி தெரிவித்தனர். வேலைவாய்ப்பு மற்றும் நுாலகம் பயன்பாடு குறித்து பேராசிரியர் சுசி கணேசன் வழங்கினர்.
பேராசிரியர் திலக்குமார், பேராசிரியர்கள் மனோகரன், அருள்தாஸ், பெரியநாயகி, மித்ரா பங்கேற்றப் பேசினர்.
கவிஞர் பால்கி, பேராசிரியர் கீதா, மருத்துவ அலுவலர் டாக்டர் அபிநயா பாண்டியன், கடலுார் மாநகராட்சி ஆணையர் டாக்டர் அனு, புதுச்சேரி கஸ்தூரிபாய் பெண்கள் கல்லூரி உளவியல் பேராசிரியர் சுரேஷ், மாவட்ட மைய நுாலக அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள் சாந்தி, மாரிமுத்து, குமணன், பன்னீர்செல்வம், ஆனந்தராஜ், முருகராஜன், வில்லியனூர் தெரகோட்டா முனுசாமி, கடலுார் மகளிர் போலீஸ் கிருத்திகா மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.