/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
/
கடலுாரில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 12, 2025 10:13 PM
கடலுார் : கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 17ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமும் நடக்கிறது.
15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆனண வழங்க உள்ளன. முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் ௨, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கப்படாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

