/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு
/
கோவிலில் சுரங்க அறை இணை ஆணையர் ஆய்வு
ADDED : அக் 24, 2024 12:45 AM

நடுவீரப்பட்டு : கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், சொக்கநாதர் கோவில் உள்ளது. மிகப் பழமையான இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இப்பணியின் போது சுப்ரமணிய சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் சுரங்க அறை கண்டறியப்பட்டது.
சுரங்க அறையை நேற்று முன்தினம் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுரங்க அறையில் எந்த பொருட்களும் இல்லாதது தெரியவந்தது.
நேற்று, கடலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் சுரங்க அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கோவில் சுவாமி சிலைகளை பாதுகாப்பாக வைக்க ரகசிய அறைகள் பல கோவில்களில் உள்ளது. அதுபோல் இந்த கோவிலிலும் அறை கட்டப்பட்டு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அறநிலையத்துறையின் மாநில, மண்டல குழுக்களின் பரிந்துரை பெற்று, வரும் காலங்களில் இந்த சுரங்க அறையை கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

