
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் கலைத் திருவிழா நடந்தது.
பள்ளி முதல்வர் நசியான் கிர கோரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தனசு, அன்பரசு, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் பரணிதரன், சிறப்பு வி ருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ் ராஜன் வரவேற்றார். கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வி இயக்குனர் ஜஸ்டின், ஆசிரியர்கள் டேவிட்ராஜ், மகேந்திரன், ஜான்பீட்டர், அலெக்ஸ் உடனிருந்தனர். விழாவை செல்வநாதன் தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.. ஜான் பிரிட்டோ நன்றி கூறினார்.

