/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வண்டிப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
/
வண்டிப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
வண்டிப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
வண்டிப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
ADDED : நவ 03, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணியசுவாமி கோவில், 300ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு
வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 6ம் தேதி, சக்திவேல் பெறும் விழா, 7ம் தேதி, சூரசம்ஹார
விழா, 8ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 9ம் தேதி விடையாற்றி உற்சவம், சுவாமிதிருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.