/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன்னித் திருவிழா: வெள்ளாற்றில் சிலைகள் கரைப்பு
/
கன்னித் திருவிழா: வெள்ளாற்றில் சிலைகள் கரைப்பு
ADDED : ஜன 27, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் மழை வேண்டியும், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், ஆண்டுதோறும் கன்னித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, காணும் பொங்கல் பண்டிகை அன்று ஒவ்வொரு வீட்டிலும், கல் நட்டு அதை கன்னியாக நினைத்து, அப்பகுதியில் உள்ள 11 தெரு முனையிலும், அலங்கரிக்கப்பட்ட கன்னி சிலையை வைத்து, தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
முக்கிய விழாவான நேற்று கன்னி சிலைகளை, ஒவ்வொரு தெருக்களில் இருந்தும் பொதுமக்கள் தலையில் சுமந்து, ஊர்வலமாக சென்று வெள்ளாற்றில் கரைத்து வழிபட்டனர்.

