/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : மே 06, 2025 12:28 AM

புதுச்சத்திரம், ;வேளங்கிப்பட்டு-பூவாலை சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு-பூவாலை சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ், கடலுார் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளங்கிப்பட்டு பகுதியில் இரண்டு இடங்களிலும், பூவாலை பகுதியில் இரண்டு இடங்களிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
இதில் ஒரு இடத்தில் வயலில் தண்ணீர் கசிவதால், புழுதி ஏர் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பன்றி உள்ளிட்டவை விழுந்து புரள்வதால், நோய் அபாயம் உள்ளது.
எனவே உடைப்பு ஏற்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

