/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
/
குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : அக் 12, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: முய் தாய் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடலுார் முதுநகர் புனித பிலோமினாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவி சாதனா. இவர் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முய்தாய் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் 12வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார். மேலும் மும்பையில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றார்.
தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி சாதனாவை, பள்ளி தலைமையாசிரியை அல்போன்சா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

