/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முக்கூட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
முக்கூட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 30, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி மூக்கூட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மகா பூர்ணாஹூதி, இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று கும்பாபி ேஷகத்தையொட்டி, காலை 6:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.