/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேத நாராயணன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
வேத நாராயணன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 12, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: வளையமாதேவி வேத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நாளை 13ம் தேதி நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வேத நாராயண பெருமாள், கமலவள்ளி தாயார் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ேஹாமங்கள் நடந்தது. நேற்று காலை பல்வேறு ஹோமங்களுடன் முதல் கால யாக பூஜை, மாலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.
இன்று (12ம் தேதி) காலை 9:00 மணிக்குள் மூன்றாம் கால யாக பூஜை, மாலை நான்காம் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை 13ம் தேதி காலை 5:00 மணிக்கு ஜந்தாம் கால யாக பூஜை, 8:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி 8:15 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.