
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பரவளூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கோ பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்தது. மாலை யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணத்தை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:45 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.