UPDATED : ஜூலை 13, 2026 04:12 PM
ADDED : ஜூலை 13, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோதண்டராமபுரம், கரைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 36; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் வசனாங்குப்பம் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக், ஆனந்தராஜ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த ஆனந்தராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் ஆனந்தராஜ் இறந்தார். விபத்து குறித்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
