/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
/
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
ADDED : ஆக 18, 2025 11:59 PM

கடலுார்; போலி ஆவணம் தயார் செய்து, நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமாரிடம் கடலுார் அடுத்த நடுக்குப்பம், மேலக்குப்பம், நல்லாத்துார் கிராமங்களை சேர்ந்த அசோக், சுரேஷ், வரதராஜ், சதீஷ்குமார், வீரமணிகண்டன், குமரேசன், அருள், சங்கர் உட்பட பலர் உறவினர்களுடன் திரண்டு வந்து அளித்த மனு:
நல்லாத்துார், நடுக்குப்பம் கிராமங்களில் வசிக்கிறோம். இப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு நடுக்குப்பம், மேலக்குப்பம், நல்லாத்துார் கிராமங்களில் சொந்தமாக நிலம் உள்ளது.
இந்த சொத்துக்களை கடந்த 5 தலைமுறையாக அனுபவித்து வருகிறோம்.
இந்நிலையில், பக்கத்து ஊரில் வசிக்கக்கூடிய ஒரு குடும்பத்தினர், ஒரே மாதிரி பெயர் இருந்ததை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, இந்த சொத்துக்களை துாக்கணாம்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் சேர்ந்து முறைகேடாக பெயர் மாற்றி வேறு இருவருக்கு 'பவர்' எழுதி ரிஜிஸ்டர் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளனர். எனவே, எங்களின் சொத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

