/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேட்டி

ADDED : செப் 08, 2025 02:49 AM

கடலுார்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என, பா.ம.க., பொருளாளர் திலகபாமா விமர்சனம் செய்துள்ளார்.
கடலுாரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர் கெட்டுப் போய் உள்ளது. ஒரு கட்சியின் தலைவ ருக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசுக்கு திருமாவளவன் ஜால்ரா அடிக்க வேண்டாம்.
துாய்மை பணியாளர்கள் விவகாரத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினை அன்புமணி கேட்பாரா என திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பா.ம.க., பொருளாளர் திலகபாமா பதிலடி கொடுத்தார். மேலும் பா.ம.க., என்றும் ஒன்றாக தான் உள்ளது.
பிரச்னைக்கு ஒரு சிலர் காரணமாக உள்ளனர். எங்களுக்கு என்றும் மக்கள் பிரச்னை தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.