தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 06, 2024 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க கோரி, சென்னையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்களின் கூட்டுக் குழு துணைத் தலைவர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், அட்வகேட் அசோசியேசன் தலைவர் காசி விஸ்வநாதன், செயலாளர் மோகன், இளையராஜா, ஜெயப்பிரகாஷ், அரசு, ராமு, சிவசங்கர், மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர்கள் குமரகுரு, சிவக்குமார், அருண், காயத்ரி, ஜென்னி, செல்வி, பரமேஸ்வரி, பிரியா உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us