/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சக்திவிளாகம் பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
/
சக்திவிளாகம் பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
ADDED : ஏப் 05, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 நாளில் 100 சதவீத கற்றல், வாசித்தல் திறன் ஆய்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்செல்வி, ஆசிரியர் பயிற்றுனர் தசோதரன் முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் மணிவாசகன் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் கற்றல் வாசித்தலை ஆய்வு செய்தார். மாணவ. மாணவிகள் தமிழ், ஆங்கிலம், செய்தித்தாள் வாசித்து திறமையை வெளிப்படுத்தினர்.
ஆசிரியர் கோமதி நன்றி கூறினார்.