நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் திருவருள் இறைபணி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
தேவாங்கர் சமூகம் நாட்டாண்மை ஆறுமுகம் தலைமை தாங்கினார். வசுமதி இறைவணக்கம் பாடினார். தனலட்சுமி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்துரு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன், ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெடுமா றன், பேராசிரியர் கோகுலாச்சாரி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
ஓய்வு பெற்ற சுகாதாரத்து றை அலுவலர் ராஜமோகன் ராமானுஜதாசனுக்கு 'உளம் போற்றும் உத்தமர்' விருது, ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர் ராஜாமணிக்கு 'நடமாடும் நாவுக்கரசர்' என்ற விருது வழங்கப்பட்ட ன. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் வாழ்த்திப் பேசினார்.
கார்த்தி நன்றி கூறினார்.