/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 05, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில், ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., நாகராஜன் வரவேற்றார். எஸ்.பி.ராஜாராம் தலைமை தாங்கி அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி, ஜாதி, மத பேதமின்றி, ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பேசினார். ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், ரவிசந்திரன், டி.எஸ்.பி.,க்கள் சபியுல்லா, ஆரோக்கியராஜ், பழனி, நாகராஜன்,மோகன், பிரபு, ரூபன்குமார், சவும்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

