/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 21, 2025 06:11 AM

கடலுார் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலுார் காவலர் நல சமூக கூடத்தில் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
பெண் கல்வியினை மேம்படுத்தவும், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவிகளை சாதனையாளர்களாக உருவாக்கிட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பயின்றிடும் வகையில் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களின் மேம்பாட்டிற்காகவும், சம உரிமைக்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டில் பெண் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாட்டில் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம்” துவக்கி வைக்கப்பட்டது.
குழந்தைகள் வளர்ப்பில் சிறப்பாக பங்களிப்பு செய்த பெற்றோர்களின் குழந்தைகள், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், கைம்பெண்களின் பெண்குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு பெண் குழந்தைகள் கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர கமிஷனர் அனு, ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, ஆர்.டி.ஓ., அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.